விளாத்திகுளம் அருகே குளத்தூர்-ராமச்சந்திராபுரம் கிராமத்தில் லாரி டிரைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் அழகுலிங்கம்(51) , அழகுலிங்கம் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார், அழகுலிங்கத்திற்கும் மனைவி முத்துக்கனிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் 20-11-2023 வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மன வருத்தத்தில் இருந்த அழகுலிங்கம் காட்டுப்பகுதியில் பூச்சிக்கொல்லை மருந்தை குடித்து மயங்க நிலையில் கிடந்துள்ளார், இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர், அழகுலிங்கத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு 108 வாகனத்தில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அழகுலிங்கம் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
லாரி டிரைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மனித உணவு சங்கிலியில் பாதி உணவுகளை தரும் மீனவர்களுக்கு: உலக மீனவர் தின வாழ்த்துக்கள்!
அடுத்த
சாலை வரி உயர்வை கண்டித்து விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026