விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி குடும்பத்திற்கு செல்போன் மூலமாக பேசி எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!



இந்த அரசு சரியான நடவடிக்கை எடுக்க என்று பார்ப்போம் இல்லை என்றால் எங்கள் ஆட்சி வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்போம். தைரியமாக இருங்கள் - எடப்பாடி பழனிச்சாமி உறுதி! 





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர். செ. ராஜீ, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஆகியோர் ஆறுதல் தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில்  விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்  இராமச்சந்திரன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஜெயன், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மோகன்,  ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர் 




மேலும் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்போன் மூலமாக மாணவியின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் கூறினார்.



அப்போது அவர் பேசுகையில் ,இந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்க சம்பவம்.. இந்த அரசு சரியான நடவடிக்கை எடுக்க என்று பார்ப்போம் இல்லை என்றால் எங்கள் ஆட்சி வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்போம். தைரியமாக இருங்கள் என்று கூறி ஆறுதல் தெரிவித்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர். செ. ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்.. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் தமிழக அமைதி பூங்காவாக இருந்தது,

2021ல் திமுக ஆட்சி வந்தது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் நடமாட்டம், அரசியல் கொலைகள் மற்றும் சாதாரண மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை,இப்ப பிரச்சனைகளை குறித்து தொடர்ந்து அதிமுகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார்.



செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் நாட்டில் இந்த நிலைமை. டிஜிபி கூட நியமிக்க இந்த அரசுக்கு துப்பில்லை, இவர்களுக்கு சரியாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்து சரியில்லாதவன் அவர்களை மத்திய அரசுக்கு அனுப்பியது மட்டுமின்றி பொறுப்பு டிஜிபி போட்டனர். காவல்துறை தலைவரே சரியாக இல்லாத காவல்துறை எப்படி செயல்படும். 


எங்கெங்கு காணினும் சக்தியடா என்று மகாகவி பாரதியார் பாடினார். ஆனால் இன்றைக்கு நிலைமை என்னவென்றால் எங்கெங்கும் காணினும் போதையடா என்ற நிலைமை தான் உள்ளது. தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது ,அண்ணா பல்கலைக்கழக விவகாரம். போதை பொருள் கடத்தல் என எல்லாவற்றிலும் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். 

கோவையில் விமான நிலையம் பின்புறம் ஒரு மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்டு நாடே வெட்கி தலை குனிந்தது ,இந்த நிலையில் தமிழகம் தலை குனியாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் பெருமை பேசிக்கொள்கிறார். 



விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி காணாமல் போனதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரை பெற்று தேடி இருந்தால் குற்றவாளிகள் சிக்கியிருப்பார்கள் மாணவி உயிருடன் இருந்திருப்பார். 



மாணவி கொலை செய்யப்பட்டு ஏழு நாட்கள் ஆகியும் இதுவரை உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. காவல்துறை எடுத்த நடவடிக்கை சரி இல்லை என்றும், ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான அடிக்கடி எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.