'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" விளாத்திகுளம் வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கான முன்னேற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு செய்தார்!



தமிழகம் முழுவதும் “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" தமிழக முழுவதும் மக்களை சந்தித்து தமிழக முன்னாள் முதல்வரும் தற்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், இதன் ஒரு பகுதியாக வருகின்ற ஜூலை 31ஆம் தேதி காலை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்ட பின்  வியாழக்கிழமை மாலை 7 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள ஏதுவான இடம் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் தேர்வு செய்வது குதித்து தமிழக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு அதிமுகவினருடன்  முன்னேற்பாடுகள் குறித்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஆய்வு மேற்கொண்டார். 31-ம் தேதி வியாழக்கிழமை மாலை வரும் எடப்பாடி பழனிச்சாமி, விளாத்திகுளத்தில் பிரச்சாரம் முடிந்த பின்பு கோவில்பட்டியில் தனியார் விடுதியில் தங்கி, அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம் தேதி  காலை 8 மணிக்கு கோவில்பட்டியில் மக்களை சந்திக்கிறார், அதனைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களை சந்திக்கிறார், பின்னர் ஆகஸ்ட் 2ஆம் தேதி  தூத்துக்குடி,ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார்.


விளாத்திகுளத்தில் ஜூலை 31 ஆம் தேதி இரவு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,அதேபோல் விளாத்திகுளம் தொகுதி முழுவதிலும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க பொதுமக்களை அழைத்து வர அதிமுக சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.




அதனைத்தொடர்ந்து மதுரை சாலையில் உள்ள மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ் இல்லத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ஆட்சி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், என்.கே.பெருமாள், மோகன்,ஒன்றிய செயலாளர்கள்மகேஷ்,பால்ராஜ், தனஞ்செயன்,தனபதி, அன்புராஜன், விளாத்திகுளம்முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் குட்லக் செல்வராஜ்,நகரசெயலாளர் ராஜகுமார், மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு K.M.சுரேஷ்குமார், ஆனந்தகுமார், மோகன்,மகளிர்அணி பிரியா,சாந்தி சிறுபான்மை பிரிவு சதீஷ், நிர்வாகிகள் வேல்முருகன், வரதராஜபெருமாள், சண்முகசாமி, பெருமாள்சாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.