தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேசிந்தலக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பாலித்தீன் பையை ஒழிப்போம் மஞ்சப்பையை காப்போம்என்ற  தலைப்பில் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராஜ்குமார் பள்ளி மேலாண்மை இயக்குனர் திருக்குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆர்வமுடன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.இதையடுத்து உலக சாதனை நிகழ்த்தும் வகையில் 4 வயது உட்பட்டோருக்கான பிரிவில் கார்த்திக் கிருஷ்ணா, பூஜா, சாதனா ஆகிய  மாணவ -  மாணவிகள் பேப்பர் கப் மீது அமர்ந்து பாலித்தீன் பையை ஒழிப்போம் மஞ்சப்பை காப்போம் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி கையில் மஞ்சப்பை வைத்து கொண்டு  யோகாசனம் செய்து அசத்தினர்.  யோகாசனம் செய்து அசத்திய மாணவ- மாணவிகளுக்கு பரிசு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் பாலித்தீன் பையை ஒழிப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில் சாய் தேவ் தொண்டு நிறுவனர் சைலஜாபள்ளி முதல்வர் வீரலட்சுமி , சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.