வசனம் பேசுபவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும். நாம் சரித்திரம் படைப்போம் - விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தலை குனியாது பொதுக்கூட்டத்தில் த. வெ.க. தலைவர் விஜயை தாக்கி பேசிய அமைச்சர் கீதா ஜீவன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை வகித்தார்.
இதில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழ் மொழியை காத்திட தமிழ் நாட்டை காத்திட வேண்டுமானால் திராவிட முன்னேற்ற கழகம் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்து ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி, 2021ல் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து வந்தனர்.அவர்கள் பழைய கூட்டணி தான் புதிய வேஷம் போட்டு வந்துள்ளனர்.
2021ல் அதிமுக பாஜக தான் கூட்டணி போட்டிருந்தனர். ஆனால் நாம் தான் வெற்றி பெற்றோம்.அதேபோல இப்போதும் அவர்கள் கூட்டணி போட்டுள்ளனர் அதில் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இன்னும் அதிமுக எத்தனையோ உடைந்துள்ளது. அவர்கள் ஜோடி போட்டு வருகிறார்கள் ஆனால் வெற்றி பெறப்போவது திமுக கூட்டணி தான் என்பதை நான் உறுதியோடு கூறிக் கொள்கிறேன்.
தேர்தல் என்பது ஒரு போர் நீங்கள் அத்தனை பேரும் படைவீரர்கள். ஒவ்வொரு வாக்கினையும் உதயசூரியன் சின்னத்தில் விழ வைப்பது உங்களுடைய கடமை. அனைவரும் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும்.நாம் இவ்வளவு மக்கள் திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் ஆனால் ஒன்றிய அரசு என்ன சொல்கிறது.எதற்கு நிதி என்று கேட்கிறது. அதுதான் எல்லோரும் நல்லா இருக்கிறீர்களே உங்களுக்கு எதற்கு நிதி, கல்வி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிதி எதற்கு என்று ஒன்றிய அரசு கேட்கிறது.அதற்காகத்தான் தமிழக முதல்வர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் எங்களுடைய உரிமையை கேட்கிறோம்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது மக்களின் வாழ்வாதாரம். அவர்களால் 100 நாள் வேலையை கூட கொடுக்க முடியவில்லை. அதையும் குறைக்கின்றனர். இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒரு நபர் கூட புதிய அட்டை போட முடியாது. ஏனெனில் ஒன்றிய அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.சரியாக வேலை செய்தால் தான் 60 தருவார்களாம். 40 ரூபாயநம்ம போட வேண்டும் என்று கூறுகின்றனர். அவ்வளவு கண்டிஷன்கள் போட்டுள்ளனர்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலமாக பெயர் வாங்குகின்றனர். அதைத் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி. அதற்காகவே அந்தத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு திட்டம் போடுகின்றனர். ஆனால் அதை நாம் விடப் போவதில்லை,நிச்சயமாக நம்முடைய முதலமைச்சர் கிராம மக்களின் நலனுக்காக அந்த திட்டத்தை நல்ல முறையில் நிறைவேற்றித் தருவார்.
பாஜக எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் எவ்வளவு அடக்கு முறையை கையாண்டாலும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை என எதை வைத்து நெருக்கடி கொடுத்தாலும் தமிழ்நாடு தலைகுனியாது,எங்களுடைய முதலமைச்சர் தலை குனிய மாட்டார். தமிழகத்தை தலைகுனியும் விட மாட்டார்.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவுமே கொடுக்கவில்லையே ,பெண்கள் ஏழை எளிய மக்கள் விளிம்பு நிலை மக்கள் விவசாயிகள் மற்றும் தமிழகத்திற்கு ஒரு அறிவிப்பும் இல்லை,தமிழகத்திற்கு தேர்தல் வருகிறது என்று நினைத்தாவது செய்திருக்கலாம். அவர்கள் எவ்வளவு அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் நம்முடைய தமிழக அரசின் ஒரு திட்டத்தை காப்பி அடித்து அறிவித்துள்ளனர்
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மகளிர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 மகளிர் விடுதிகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது . இதைத்தான் அவர்கள் மாவட்டந்தோறும் மகளிர் விடுதி என்று பட்ஜெட்டில் அறிவித்தனர்.
நம்முடைய திட்டத்தை காப்பி அடித்து அறிவித்துள்ளனர்
தமிழகத்தில் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு மானிய கடன்களும் வழங்கப்பட்டுள்ளது,அதேபோன்று மகளிர் சுய உதவிக் குழுவினர் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதிகபட்சமாக 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
பெண்களை தொழில் முனைவர் ஆக்க வேண்டும் என்பதற்காக திட்டங்களை தீட்டி அதில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம்.
வேலைவாய்ப்பு தரக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பெண்களை தொழில் முனைவர்களாக உருவாக்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வாசிக்கிறார்.
அதைக்கூட எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்,ஒன்றிய அரசு தமிழ்நாட்டை பாராட்டு கூடிய அளவிற்கு நம்முடைய முதலமைச்சரின் திட்டங்கள் மேன்மைப்பட்டு உள்ளது. தமிழகத்தை வளர்ச்சி அடைய வைத்துள்ளது தமிழ் மொழிக்கு வளர்ச்சியை தந்துள்ளது.
இந்த தடவை பட்ஜெட்டில் திருக்குறளைக் கூட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லவில்லை. மறந்து போனாங்க தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 11 கோடி தான் ஆலயத்தின் கருவறையில் பூஜை செய்யப்படும் சமஸ்கிருதம் மொழிக்காக 2300 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ் மொழி செம்மொழிக்கு வெறும் 11 கோடி ரூபாய். அந்த அளவுக்கு நம்மை ஒடுக்குகிறார்கள்.
என்ன செய்தாலும் சரி. மக்கள் தயாராகிவிட்டனர்.தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள். தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் மீண்டும் வரவேண்டும் என்பதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.இதை யாரும் அசைக்க முடியாது நம்முடைய ஆட்சி தான் வரும்
ஒரு கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு 45% ஆதரவு அதிமுகவிற்கு 33 சதவீதம் என்று தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 12 சதவீதம் வேறுபாடு இருக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது.
நம்முடைய ஆட்சி தான் வரும் இருந்தாலும் நம்முடைய பணி என்ன பிரச்சாரம். நாம் அத்தனை பேரும் போருக்கு தயாராக இருக்கிறோம்
நம்முடைய பிரச்சார முக்கியம் நம்முடைய சகோதரிகள் வீடு வீடாக சென்று திட்டங்களை எடுத்துக் கூறி மக்களிடம் நமக்கு ஆதரவாக வாக்குகளை பெற வேண்டும்.மதில் மேல் பூனையாக இருக்கிறார்களுக்கு நாம் எடுத்துக் கூறி நமக்கு வாக்காக மாற்ற வேண்டும்.
ஒரு காலத்தில் நம்முடைய தலைவரின் பேச்சு தான் பிரச்சாரமாக இருந்தது. அதன் பின்னர் ரேடியோ பத்திரிக்கை. காலத்தில் டிவி. இன்றைக்கு ஏஐ யுகம். சமூக ஊடகங்களில் நீங்கள் அனைவரும் துடிப்புடன் இருக்க வேண்டும். அதன் மூலம் நம்முடைய திட்டங்களை எல்லா பகுதிக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
திண்ணையாக இருந்தாலும் நாம் அதை மேடையாக மாற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும்.டீக்கடையாக இருந்தாலும் பிரச்சாரக் களமாக மாற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும்,அதேபோல வசனம் பேசுபவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும். நாம் சரித்திரம் படைப்போம்.தமிழ்நாடு தலை குனியாது நிச்சயமாக வெல்வோம். 234 படைப்போம் வரலாறு என்றார்.
நடைபெற்ற பொதுகூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் A.C.வசந்தம் ஜெயக்குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள், அன்புராஜ், ராதாகிருஷ்ணன்,மும்மூர்த்தி செல்வராஜ், இம்மானுவேல், நவநீதகண்ணன், சின்னமாரிமுத்து, காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், நகர்மன்றத்துணைதலைவர் வேலுசாமி கவுன்சிலர் மகேந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.