திமுக ஆட்சியில் 40 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது: உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த எம்.எல்.ஏ மார்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மார்கண்டயேன், விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பட்டி சித்தவநாயக்கன்பட்டி வேலிடுபட்டி அம்மன் கோவில்பட்டி சிங்கிலி பட்டி கல்குமி பேரிலேவன்பட்டி முதலிப்பட்டி கீழநம்பியாபுரம்,தெற்கு முத்தலாபுரம்,வீரப்பட்டி, மேலநம்பியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான மார்கண்டயேன் பேசுகையில், தமிழக முழுவதும் சுமார் 40,000 கோவில்களில் திமுக ஆட்சியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது, அதேபோல் சிங்கிலிபட்டி பேரிலேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகங்களில் மார்க்கண்டேயன் பெயர் இல்லாத கோவிலை கிடையாது, விளாத்திகுளம் தொகுதியில் உள்ள பெரும்பாலான கோவில் கும்பாபிஷேக கல்வெட்டுகளில் மார்க்கண்டயேன் பெயர் கண்டிப்பாக இருக்கும்.
மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் சிங்கிலி பட்டி முதல் ஆற்றங்கரைக்கு வைப்பாரின் நடுவே மேம்பாலம் கட்டித் தரப்படும் எனவும், அதேபோல் சிங்கிலிபட்டி, பேரிலேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி பேவர் பிளாக்சாலை உள்ளிட்ட செய்த நலத்திட்ட பணிகளை எடுத்துக் கூறியும் உதயசூரியன் சின்னத்திற்கு எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தொழிலதிபர் செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர் முனியசாமி, மதிமுக புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.