விளாத்திகுளம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது தவற விட்ட 3பவுன் தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரத்தில் நேற்று மெயின் பஜாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது அந்த திருமணத்திற்கு எட்டையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த வீரலட்சுமி தம்பதியினர் திருமணத்திற்கு சென்றுள்ளார் அப்போது வரும் வழியில் தனது 3 பவுன் தங்க செயினை வைத்து இருந்த மணி பரிஸ்சை தவற விட்டதாக தெரிகிறது இதனையடுத்து திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தற்செயலாக மணி பர்சை திறந்து பார்த்தபோது தங்கச் செயின் மாயமானது தெரியவந்தது இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் அந்த வழியாக நடந்து சென்ற போது மண்டபதின் அருகே உள்ள சாலையில் மணி பர்ஸில் ஒரு தங்க செயின் கீழே கிடந்ததை பார்த்த கணேசன் அதனை எடுத்து எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவ ராஜாவிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் செயினை தவறவிட்ட தம்பதியினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதனையடுத்து திருமண நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர் தாங்கள் தவறவிட்ட தங்க செயின் தற்பொழுது எட்டையாபுரம் காவல் நிலையத்தில் உள்ளது என தகவல் தெரிந்ததை தொடர்ந்து தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி எட்டையாபுரம் காவல் நிலையத்திற்கு சென்று தவறவிட்ட தங்க செயின் மற்றும் மணி பர்ஸ் அடையாளம் குறித்த தெரிவித்து நகையை பெற்றுக் கொண்டனர். கீழே கிடந்த தங்க செயினை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு தம்பதியினர் மற்றும் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.