கேரள மாநிலம் கெட்டியம் - சாத்தனூர் பகுதியை சேர்ந்த மரிய மைக்கில் என்பவரின் மகன் ஞானராஜ் (18), இவர் சாத்தனூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி. காம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாலம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு வந்துள்ளார், அப்போது அப்பகுதியில் உள்ள சக நண்பர்களுடன் சேர்ந்து மேல ஈரால் காட்டுப் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஞானராஜ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இல்ல நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது...
Vilathikulam
கேரளா கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இடி,மின்னல் தாக்கி தேவாலய பாதிரியார் உயிரிழப்பு.
அடுத்த
பீர் பாட்டில் வாங்குவதில் பிரச்சனையில் பெயிண்டர் குத்தி கொலை?
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026