காஷ்மீர் தாக்குதல் : விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி!
காஷ்மீரில் பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கி வந்த பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சி குள்ளாக்கியது. இது தொடர்பாக இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி இந்தியர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தாக்குதலில் பலியானவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் போத்தீஸ் ராமமூர்த்தி, வடக்கு மண்டல் தலைவர் காட்டு ராஜா, தெற்கு மண்டல் தலைவர் சுயம்பு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் செந்தில்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவர் இராம காளியப்பன், ஆன்மீக பிரிவு ரவி உட்பட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பலர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்...