எட்டயபுரம் அருகே பள்ளி மாணவரை சமுதாய நலக்கூடத்தை திறக்க வைத்து அழகு பார்த்த கனிமொழி எம்.பி !



தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில், சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூடம்  அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அம்போது அங்கு நின்று கொண்டு இருந்த பள்ளி மாணவர் ஒருவரை அழைத்து அவரது கையில் கத்தரிக்கோலை கொடுத்து ரிப்பன் வெட்ட வைத்து சமுதாய நலக்கூடத்தை திறக்க வைத்தார். 




இதனை தொடர்ந்து கனிமொழி எம். பி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். விழாவில் கலந்து கொள்ள வந்த கனிமொழி எம். பியிடம் ஏராளமான இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.