முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில்  நடைபெற்ற மாபெரும் மின்னொளி கபடி போட்டியை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.!



தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழாவானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தலைமையில் மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி தனியார் பள்ளி மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி அணியினர் கொண்டனர். இப்போட்டியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் ஆகியோர் கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை தொடங்கி வைத்தனர். சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியை மைதானத்தைச் சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து அமர்ந்து கண்டுகளித்தனர். மேலும் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இட் போட்டியை காண வரும் பொது மக்களின் வசதிக்காக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் இலவசமாக ஆட்டோ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...