விளாத்திகுளம்,புதூரில் கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரம்!


மகளிர் உரிமை தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய போது எடப்பாடி பழனிச்சாமி அதை கொடுக்க முடியாது என்று சொன்னார்.


அப்படி சொன்ன எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வகையில் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின்  ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகையை தந்து , அடுத்த ஆட்சியில் ரூபாய் இரண்டாயிரம் ஆக வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 


கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக மாதம் தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அது ரூபாய்.1500யாக உயர்த்தப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கும் காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1500 வழங்கப்படும். 


லேப்டாப் திட்டத்தை நிறுத்தியது எடப்பாடி பழனிச்சாமி. மறுபடியும் அந்த திட்டத்தை கொண்டு வந்து லேப்டாப் கொடுக்க ஆரம்பித்து வைத்துள்ளது நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலின். 


அடுத்து ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு  லேப்டாப் வழங்கப்படும்.மகளிர் சுய உதவிக் குழுவினர் தொழில் தொடங்க ரூபாய் 5 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். 


மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது  100 நாள் வேலை திட்டம்,இன்றைக்கு யாருக்காவது 100 நாள் வேலை கிடைக்கிறதா? ஊதியம் ஏறுகிறதா. அது இல்ல ஏனெனில் பிரதமர் மோடி அதை நிறுத்திவிட்டார்.

அந்த திட்டத்தகற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தியுள்ளனர். 


100 நாள் வேலைவாய்ப்பில் பணி வழங்குவது குறித்து டெல்லியில் இருந்து முடிவு செய்வார்களாம்,அப்படி என்றால் யாருக்கும் வேலை கிடைக்காத நிலை வந்து விடும்,அதை எதிர்த்துப் போராடி நியாயம்பெற்றுத் தரக்கூடிய ஒரே முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். பாஜக மோடி எதை சொன்னாலும் எடப்பாடி பழனிச்சாமி வாயை திறக்கமாட்டார். கையைக் கட்டிக் கொண்டு நிற்பார். 

தமிழகத்திற்கு நிதி வர வேண்டும் என்றால். தமிழகத்திற்காக போராடி உரிமைகளை பெற வேண்டும் என்றால்  உங்களுக்காக போராடக்கூடிய தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு. தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழிக்கு  போராடக்கூடிய ஒரே இயக்கம் திமுக தான் என்றார்.