விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி குடும்பத்திற்கு கனிமொழி எம்பி ஆறுதல்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி குடும்பத்திற்கு கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர்.  


குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி தரப்படும். உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம், கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரி கல்வி செலவு மற்றும் வேலைக்கான அனைத்து உதவியும் செய்வோம். தைரியமாக இருங்கள் என்று மாணவியின் குடும்ப த்தினருக்கு கனிமொழி எம்பி ஆறுதல் கூறினார்.


அவருடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.