விளாத்திகுளம் அருகே வேம்பாரில் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா:20-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தனர்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் சே.ஜாண் பிரிட்டோ தலைமை தாங்கினார். முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் தலைவர் அ.இருதயராஜ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பொ.நரசிம்மன், ஞா.தாவீதுராஜா, அமல்ராஜ், சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக நடத்து சென்று அங்குள்ள காமராஜர் சிலைக்கு பாலூற்றி மரியாதை செலுத்தினர். முன்னதாக வேம்பார் பஸ் நிறுத்தத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் தொம்மை குரூஸ் காங்கிரஸ் கொடி ஏற்றினார். தொடர்ந்துஅங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதைப்போல் தூத்துக்குடி மாவட்ட பெரியசாமிபுரம் கிராமத்தில்  காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பெரியசாமிபுரம் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ராபர்ட் பெல்லார்மின் தலைமையில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.