விளாத்திகுளம் அருகே காடல்குடி அரசு பள்ளியில் மாணவர் காவல் படை துவக்கம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் காவலர் படை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காடல்குடி உதவி ஆய்வாளர் விநாயகம் தலைமையில், காவலர்கள் மாரியப்பன், ராஜசேகர், தேவி மற்றும் சங்கீதா உள்ளிட்ட ஏராளமான போலீசார் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாடாளுமன்ற செல்வி, பள்ளி மாணவர் காவலர் படை பொறுப்பாசிரியர் மாரிமுத்து ஆகியோர் இந்த மாணவர் காவல் படையை இப்பள்ளியில் துவக்கி வைத்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இப்பள்ளியின் 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களை இந்த மாணவர் காவல் படைகள் இணைத்து அவர்களுக்கு ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தி நிறைவு நாளன்று காவல்துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் விநாயகம் மாணவர்களிடம் பேசிய போது; சமூகக் காவலில் மாணவர்களின் பங்கு, பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் தூய்மை பயிற்சி, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு, சமூக குற்றங்கள், குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு, பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு  ஏற்ப்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார். பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சங்கரமூர்த்தி, வனிதா முத்துக்குமாரி, நிகல் பானம் பானு, செண்பகராஜ், அந்தோணிசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.