விளாத்திகுளம் பகுதிகளில் பயிர் சேதங்கள் குறித்து தோட்டக்கலை துறை இணை இயக்குனர்கள் ஆய்வு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிரிட்டிருந்த மானாவாரி பயிர்கள் அனைத்தும் முற்றிலும் மழை வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்கள் சுந்தர்ராஜ், மலர் மற்றும் உதவி இயக்குனர்கள், வருவாய் துறை அதிகாரிகள் இன்று விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட சூரங்குடி, M.குமாரசக்கணபுரம் மற்றும் கலைஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மிளகாய், உள்ளி, கம்பு உள்ளிட்ட பயிர்களை மழைநீர் தேங்கியுள்ள நிலங்களில் இறங்கி ஆய்வு செய்தனர். மேலும் ஆய்வு செய்ய வருகை தந்த தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் தங்களுக்கு இழப்பீடு மற்றும் பயிர்க்காப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.