"S.I.R-ன்றது திமுகக்காரங்க காதில் FIR-னு விழுகிறது போல.. வரிசையாக திமுகக்காரன் மேல FIR உறுதி..." - கடம்பூர் ராஜூ விமர்சனம்!
தூத்துக்குடி மாவட்டம் புதூரில், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனவதி, தனஞ்செயன், ஆண்டி உள்ளிட்டோர் ஏற்பாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், BLA-2 பாக முகவர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதேபோல், விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் இராமச்சந்திரன்,மகேஷ்,பால்ராஜ் மற்றும் மாரிமுத்து ஏற்பாட்டில் பாக் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்சியினரிடையே சிறப்புரையாற்றி, ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,

* தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும், தகுதி இல்லாத வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறக் கூடாது. நமது கொள்கையும், மக்களின் கோரிக்கையும் அதுதான். இதில் என்ன தவறு இருக்கிறது. ஒருவேளை "S.I.R-ன்றது திமுகக்காரங்க காதில் FIR-னு விழுகிறது போல.. ஏனென்றால் வரிசையாக திமுகக்காரங்க மேல FIR விழப்போறது உறுதி அது தேர்தலுக்கு முந்தியோ அல்லது பிந்தியோ... இப்போதே ஆரம்பித்துவிட்டது. "உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்"- என பழமொழியைக்கூறி இப்போதுதான் COUNTING START இனி எத்தனை விக்கெட் விழப்போகுதுனு டிசம்பர், ஜனவரியில் தான் தெரியும்... என திமுக அமைச்சர்களின் மீது பாயும் வழக்குகள் பற்றி கடுமையாக விமர்சித்தார்.
* S.I.R வேண்டாம் என்று எந்த பொது மக்களும் கூறவில்லை, வேண்டாம் என்ற ஒரே குரல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் இருந்து மட்டுமே வருகிறது.
* S.I.R வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணி செம்மையாக செய்து தகுதியுள்ள வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்துவிட்டால், நாம் விளாத்திகுளம் தொகுதி மட்டுமில்லாமல் 200 தொகுதிகளுக்கு மேல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும்.
* குறிப்பாக விளாத்திகுளம் தொகுதியை பொருத்தமட்டில் 2026 தேர்தலில் நாம் அதிக வாக்குகள் பெற்று எதிரியை மட்டுமல்லாது துரோகியையும், துரோகத்தையும் வீழ்த்த வேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என கட்சியினரிடையே சிறப்புரையாற்றி, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
நடைபெற்ற இரண்டு நிகழ்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே.பெருமாள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியசெயலாளர் போடுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்யா,தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ்,எட்டயபுரம் நகரசெயலாளர் ராஜகுமார்,அதிமுக வழக்கறிஞர் பாபு செல்வகுமார்,புதூர் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் பிரியா, கோவில்பட்டி மகளிர் இளம்பெண்கள் பாசறை கவியரசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சண்முகசாமி,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.