விளாத்திகுளம் பகுதியில் வர இருந்த ரயில்வே திட்டத்தின் தடுத்தது திமுக அரசு தான்: இதை ஆட்சி தொடர்ந்து நீடித்தால் மக்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு!
ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு சொன்னாங்க "இங்க விடியலும் இல்ல அவியலும் இல்லை" அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் தான் விடியல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் அதிமுக ஊழியர் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு,சென்னை to தூத்துக்குடி செல்வதற்கு விளாத்திகுளம், குளத்தூர்,நாகலாபுரம் வழியாக வர இருந்த ரயில்வே திட்டத்தினை திமுக அரசு தான் தடுத்து நிறுத்தியது.
இதே திமுக ஆட்சி தொடர்ந்து நீடித்தால் தமிழக மக்களை அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்ற மனநிலையில் தமிழக மக்கள் இருக்கின்றனர்.இந்த ஆட்சியின் அவல நிலையினால் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் இருக்கிறது.
ஸ்டாலின் தான் வருகிறார் விடியல் தரப்போறாருன்னு சொன்னாங்க, "விடியலும் இல்ல அவியலும் இல்லை" அவர்களின் குடும்பத்திற்கு மட்டும்தான் விடியல் உள்ளது.
கல்வி கடன் தள்ளுபடி இல்லை,விவசாய கடன் தள்ளுபடி இல்லை,விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ், நிவாரணம் அள்ளிக் கொடுத்த ஆட்சி எடப்பாடி ஆட்சி,திமுகவினர் எதைக் கேட்டாலும் இல்லை இல்லை என்று கூறிவரும் நிலையில், மக்கள் திமுகவினரிடம் உங்கள் உதயசூரியனுக்கு ஓட்டு இல்லை என்று கூற வேண்டும் என்று கடம்பூர் ராஜு பேசினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மதிமுக புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, புதூர் நகர செயலாளர் ஆண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ராஜகோபால், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சரவண கிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன், ஒன்றிய செயலாளர் போடுசாமி, பால்ராஜ்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன், முன்னாள் கவுன்சிலர்கள் பெருமாள்சாமி, விஜயகுமார், சிறுபான்மை நலப்பிரிவு சதீஷ், மகளிர் அணி சாந்தி, பிரியா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.