*தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில் தான்...*



*ஒழிக ஒழிக  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன்* - மதுரை விமான நிலையத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த டெல்லி சட்டக் கல்லூரி மாணவர் அக்சய்!





மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான மூலமாக சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது , திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மகன்  டெல்லியில் சட்டக் கல்லூரியில்  4ம் ஆண்டு படித்து வரும் அக்சாய்  திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒழிக..ஒழிக என்று குரல் எழுப்பினர். அவரை போலீசார்  அவரை அப்புறப்படுத்தினர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அக்சய் செய்தியாளர்களிடம் பேசுகையில் 



*தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில் தான்...*



*ஒழிக ஒழிக  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன்* - மதுரை விமான நிலையத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த டெல்லி சட்டக் கல்லூரி மாணவர் அக்ஷ்ய்!



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களின் மகன் டெல்லி சட்டக் கல்லூரியில் இருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர் அக்ஷ்ய் செய்தியாளர்களிடம் பேசுகையில் , தமிழக முதல்வர்  இந்த நாட்டிற்கு குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். 



அவருடைய குரல் தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்ற முடியும் என்கிற குரலாக உள்ளது.



பாசிச மற்றும் தனது சொந்த கருத்துக்களை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம்  ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் இணைத்து எழுதியது போல் எனக்கு தென்பட்டது.



மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியிலும் அதை யொட்டி பேசியிருந்தார். 



அந்த தீர்ப்பின் மூலம் என்னால் தீபத்தை ஏற்ற முடியவில்லை . நான் வந்துள்ள இந்த மன்றத்தில் தீபத்தை ஏற்றி விடுவேன் என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார். 


அதைக் கண்டு நான் மிகவும் கவலை அடைந்தேன்.



இதையொட்டி தமிழக முதல்வர் அவர்கள் ஒரு புரட்சிகரமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.



நாம் இதை செய்வோம். அதனால் வரக்கூடிய பின் விளைவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். 



இந்த தைரியத்தில்தான் நான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அந்த கோஷத்தை எழுப்பினேன். 



*ஒழிக ஒழிக  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன்*



Corruption என்பது பணத்தால் மட்டும் கிடையாது . கருத்துக்களாலும் ஆகக் கூடியது.



அதேபோன்று corrupted கருத்துகளைக் கொண்ட நீதிபதிகள் இன்று இருக்கின்றனர். 



விளாத்திகுளம் தொகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது நாடாளுமன்றம் மூலமாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி  எம்பியிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம்.


அந்த நீதிபதிக்கு தகுந்த நீதியை பெற்று தருவார் என்று நம்புகிறேன் என்றார்.