திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்?
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தேர்தல் பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகிறது.
ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், அதைப்போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 8 பறக்கும் படையினர் தற்போது தேர்தல் பணி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு 12 மணியளவில் தார்ப்பாய் மூடியவாறு தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை எட்டையாபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த சரக்கு வாகன முழுவதும் திமுக கட்சிக்கொடி,திமுக கட்சிதுண்டு,தொப்பி,ஸ்டிக்கர் உள்ளிட்ட திமுக கட்சி சார்ந்த பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
பின்பு வாகனத்தில் இருந்த கட்சிக்கொடி, கட்சிதுண்டு உள்ளிட்ட பொருட்களை ஒரு குறிப்பிட்ட அளவில் மற்றும் பறிமுதல் செய்து மீதமுள்ள திமுக அச்சிடப்பட்டிருந்த கட்சி கொடிகள்,கட்சித்துண்டு,தொப்பிகளை வாகனத்தோடு கோவில்பட்டிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதுவரை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் பத்து முதல் 15 லட்சம் வரை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது, அதையும் முறையாக கணக்கு காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலருமான இளம்பகவத் கூறுகையில், இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 45 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியிருந்த குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் திமுக சார்பில் எழுதப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் தற்போது வரை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பல்வேறு அரசியல் அமைப்பினர் முன்வைக்கின்றனர், தற்போது நடைபெறும் ஜனநாயக தேர்தலை திமுக அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்...