கண் துடைப்புக்காக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவதா? சார் ஆட்சியர் முன்பு மக்காச்சோளத்தைக் கொட்டிய விவசாயிகள் - எட்டயபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் ஹீயூமன்சூ மங்கள் தலைமையில் நடைபெற்றது. எட்டயபுரம், விளாத்திகுளம்,புதூர், கோவில்பட்டி பகுதியில் காட்டுபன்றிகளால் பயிர்கள் சேதம் அடைந்து வருவதாகவும், இது குறித்து பலமுறை  கோரிக்கை வைக்கும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, 1 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு இருந்த நிலையில், போதிய விலை இல்லை என்பதால் விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்து வருவதாகவும், நவதானிய பயிர்கள்  மற்றும்  மக்காச்சோள பயிர்களை பாதுகாக்க வகையில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவிலை. இந்த நிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் என்ற பெயரில்  அதிகாரிகள் கண்துடைப்புக்காக கூட்டம் நடத்துவதாக கூறி  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், கரிசல் பூமி விவசாயிகள்  சங்க தலைவர் வரதாரஜன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மக்காச்சோளத்தை சார் ஆட்சியர் முன்பு கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.



காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாய விளை பொருட்களை சேமிக்கும் வகையில்  குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும், மக்காச்சோளத்திற்கு ஆதார விலை நிர்ணயம் செய்து தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும், மகளிர்க்கு கோடைகால சிறப்ப நிதி வழங்கியது போல பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ. 10000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.



விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சார் ஆட்சியர் முன்பு விவசாயிகள் மக்காச்சோளத்தை கொட்டிய சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.