விளாத்திகுளத்தில், வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்!  தமிழகம் முழுவதும் இன்று வட்டாச்சியர் அலுவலகங்களில், கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 14 அம்ச  கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகராஜ் முன்னிலையிலும், வட்டார தலைவர் குப்புராஜ் தலைமையிலும் வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான வருவாய் கிராம உதவியாளர்கள் தங்களது கோரிக்கைகளான; 

• வருவாய் கிராம உதவியாளர்களை அரசு ஊழியர் பட்டியலில் "D" பிரிவை இணைக்க வேண்டும்.

• கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

• மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த எரிபொருள் படி ரூ‌.2500 வழங்க வேண்டும்.

• CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கும் பிடித்தம் செய்த தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விளாத்திகுளத்தில் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதில், வட்டார செயலாளர் சாலமன், வட்டார பொருளாளர் சண்முக ராமநாதன் மற்றும் ஏராளமான தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.