விளாத்திகுளத்தில், பள்ளி மாணவிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய் : காயம் பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 2 பேர் உட்பட ஒன்றன்பின் ஒன்றாக சத்யா நகர், ஹை ஸ்கூல் ரோடு, மீனவன் பாளையம் தெரு, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக 15-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறியுள்ளது. இதனால் காயம் அடைந்தவர்கள் தற்போது விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வெறிநாய்க்கடி விவகாரம் தொடர்பாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் இருந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக வெறிநாயைப் பிடிப்பதற்கு மதுரையில் இருந்து ஆட்களை வர வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, விளாத்திகுளம் பகுதிகளில் அதிகப்படியான நாய்கள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நிலையில், தற்போது ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...
Vilathikulam
15-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்!
அடுத்த
அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026