விளாத்திகுளத்தில், "கோலாகலமாக நடைபெற்ற"முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம்!"



தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவின் 7-ம் நாளை முன்னிட்டு முருகனுக்கும் - வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமிகளின் திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கோவிலின் நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கும் - வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும் பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் விஷேச தீபாராதனையும் காட்டப்பட்டது. பின்னர் மதியம் 1  மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமான் மற்றும்  வள்ளி, தெய்வானைக்கும், பின்னர் ஜெயந்தி நாதர் மற்றும் சண்முகருடனும் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் திருக்கல்யாண வைபவத்தை கண்குளிர கண்டு ரசித்து தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.