விளாத்திகுளத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டும்: பாரம்பரிய விதைத்திருவிழாவை முன்னிட்டும்: தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!



சீறிப்பாய்ந்த 82 ஜோடி மாடுகள் : வெற்றியாளர்களுக்கு ரொக்கத்தொகை,50 கிலோ பேரிச்சம்பழம், மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினம் மற்றும் பாரம்பரிய விதை திருவிழா முன்னிட்டு விளாத்திகுளத்தில் விவசாய சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, பூஞ்சிட்டு,தேஞ்சிட்டு என பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி,ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்டதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  சுமார் 82 ஜோடி மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, சிரிப்பாய்ந்த போது ஒரு சில மாட்டு வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது, அதேபோல் ஒரு சாரதி ஓட்டி வந்த மாட்டுவண்டி ஒற்றை சக்கரத்துடன் மின்னல் வேகத்தில் சீரிப்பாய்ந்ததும் அங்குள்ள பார்வையாளரின் கண்களுக்கு விருந்தளித்தது.

அதேபோல் பாரம்பரிய விதைத்திருவிழாவை முன்னிட்டு அங்கு பாரம்பரிய நெல்விதைரகங்கள்,கரிசல்காட்டில் பகுதியில் விளையக்கூடிய தானிய வகைகள்,காய்கறிகள்,பனை ஓலையினால் செய்யப்பட்டிருந்த கம்மல்,நெத்திச்சுடி, வளையல்,கழுத்துப்பாசி,தலைக்குமாட்டக்கூடிய குப்பிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த விதைத்திருவிழா கண்காட்சியினை விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி மக்கள்,விவசாயிகள் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு ஏர் உழவன் விவசாயிகள் சங்கம் சார்பில்  விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, ரொக்கபரிசு, மாடுகளுக்கு இரண்டு சாக்குகளில் 50 கிலோ பேரிச்சம்பழம், மரக்கன்றுகள் ஆகியவை பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.


பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தினை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் மற்றும் CMA ராஜீவ் தொடங்கி வைத்தார்கள். தேன்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தினை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் Rohit logistic காண்டீபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் . 


இந்த நிகழ்வில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேஷ் உழவர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட தலைவர் ராமர், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் காளிமுத்து ராஜ், விளாத்திகுளம் நகரத் தலைவர் செல்லத்துரை மற்றும் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.