விளாத்திகுளம் அருகே ரூ. 29.70- லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீரப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதத்திட்டத்தின் கீழ் ரூ.29.70- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்த்,வெங்கடாசலம் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.