விளாத்திகுளம் அருகே 30,000- லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை புதிய நீர் தேக்க தொட்டி திறப்பு! 


தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே குளத்தூர் ஊராட்சி,காமராஜர் நகரில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 30,000- லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை புதிய நீர் தேக்க தொட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.