"உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட K.குமரெட்டையாபுரம் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமையில் "உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்" சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மின்சாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட 15 துறைகள் மூலம் 46 அரசு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனர். இம்முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சென்று ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பொது மக்களின் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கையை வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். மேலும் பொது மக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வளிக்கும் வகையில் மின்வாரிய அட்டை பெயர் மாற்றம், ரேஷன் அட்டை திருத்தம் உள்ளிட்ட உத்தரவு ஆணைகள் பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.