கொளுத்தும் வெயிலில் எட்டையாபுரத்தில் அதிமுகவினர் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரச்சாரம் அதிமுகவினர்!

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்..




தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்பேரில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூயின் ஆலோசனையின்படி, தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் மார்க்கெட் பகுதியில் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர், அதிமுகவின் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரச்சாரம் அதிமுகவினர்கடைகள் மற்றும் வீதி வீதியாகவணிக நிறுவனங்களில் பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரம் வழங்கி ,தற்போது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக அனைவருக்கும் 2000 ரூபாய் மகளிருக்கு உரிமைத் தொகை, மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகள், மற்றும் மகளிர்க்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அறிவித்திருப்பதால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.