மானாவாரி பகுதியில் மகசூலை அதிகரிக்க பண்ணைக் குட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. உரிய பராமரிப்பு செய்து விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் - விளாத்திகுளம் அருகே பண்ணைக்குட்டை தொடக்க விழாவில் கனிமொழி எம்பி பேச்சு!




தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர், கயத்தாறு, கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 5 வட்டாரங்களில்  மானாவாரி வட்டாரங்களில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடும் வகையிலும், பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் விவசாய நிலங்களில் நீரை சேமிக்கும் வகையில் 1000 பண்ணை குட்டைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




இதன் தொடக்க விழா விளாத்திகுளம் அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ஆயிரம் பண்ணை குட்டைகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கலந்துகொண்டு பண்ணை குட்டைகள் ஆரம்பிக்கும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் பண்ணை குட்டைகள் ஆரம்பிப்பதற்கான உத்தரவுகளையும் விவசாயிகளிடம் வழங்கி பேசுகையில் மற்ற மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக விளாத்திகுளம் பகுதிகளில் விதைக்கப்படும் சோளம், மிளகாய் மகசூல் உள்ளிட்ட பயிர் வகைகள் விளைச்சல்  குறைவாக இருந்தது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நம்முடைய பகுதிகளில் அது குறைவாக இருக்கிறது என்ற காரணம் தெரியவந்தது. நம்மை விட 2, 3 மடங்கு பயிர் செய்து விவசாயிகள் பலன் பெறும்போது , நம்முடைய விவசாயிகள் பின்தங்கி இருக்கக் கூடாது என்ற காரணத்திற்காக நமது மாவட்டத்தில் ஆயிரம் பண்ணை குட்டைகள் தொடங்கும் பணியினை நமது மாவட்ட ஆட்சியர் உருவாக்கியுள்ளார். இதற்கு பல நிறுவனங்கள் நமக்கு உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளனர். பண்ணை குட்டைகள் உருவாக்க இந்த நிறுவனங்கள் உதவியாக இருக்கும் அதன்பின்னர் அதனை பராமரிப்பது என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது நாடு முழுவதும் பல விவசாயிகள் பண்ணை குட்டைகள் அமைத்து நிலத்தடி நீரை அதிகரித்துள்ளனர். தங்களது விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தாங்களே சேமித்து வைத்துக் கொள்ளும் நிலைய உருவாக்கி உள்ளனர். இதனை இங்கு உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் 



இதில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர்  இளம் பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.