கிராமப்புறங்களில் பல்வேறு அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் தொடங்கி வைத்தார்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டாவடமலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11.11- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து மேலக்கல்லூரணி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.55- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இணையும்,ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் , ஸ்ரீரங்கபுரம் to  நூத்தலக்கரை - சின்னையாபுரம் இடையே முதல்வரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியிணையும், ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய். 4-16 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், சுந்தரபச்சையாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதியகலையரங்கம் கட்டுவதற்கான பணியினையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 6-66 மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், அதே கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் ரூபாய் 15-55 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி என பல்வேறு கிராமப்புற வளர்ச்சி திட்டபணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் தொடங்கி வைத்து,கிராம பொதுமக்களின் கோரிக்கைகள் அடிப்படை வசதிகளையும் கேட்டறிந்தார்.

புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.