எட்டயபுரம் பகுதியில் நள்ளிரவில் இரண்டு கடைகளை பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் திருட்டு மர்ம சாமிக்கு போலீஸ் வலைவீச்சு - சிசிடிவி கேமரா வயர்களை துண்டித்து திருட்டு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேல வாசல் பகுதியில் கண்ணன் என்பவர் கணினி மையம் ,பிரிண்டர் ஜெராக்ஸ் உள்ளிட்ட கடை நடத்தி வருகிறார் இதில் எஸ். பி.ஐ வங்கி கிளை நிறுவனம் வாடிக்கையாளர் சேவை மையமாகவும் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே எட்டயபுரம் கோட்டை தெற்கு தெரு ரோஜா மைதீன் என்பவர் கடந்த 10 வருடங்களாக ஏர் டிராவல்ஸ் மற்றும் இ சேவை மையம் நடத்தி வருகிறார் . இந்நிலையில் இன்று அதிகாலையில் இரு கடைகளின் பூட்டுகளும், உடைக்கப்பட்டு இருப்பதை அருகில் இருந்தவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து பார்த்த போது,இருகடைகளின் பூட்டுகளும், உடைக்கப்பட்டு இருந்தது மட்டுமன்றி, அங்கிருந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வயர்களும், துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் ஏர் டிராவல்ஸ் கடையில் 70 ஆயிரம் ரூபாய் பணமும் எஸ் பி ஐ சேவை மையம், கணினி பயிற்சி மையத்திலும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் திருட்டு சம்பவம் நடைபெற்ற இரு கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். மெயின் சாலையில் இருக்க கூடிய அடுத்தடுத்து இரு கடைகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.