எட்டையபுரத்தில், மதிமுக சார்பில் "மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்" பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரம் நடுவிற்பட்டி மார்க்கெட் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில், "மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்" சிறப்பாக நடைபெற்றது.  தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மொழிப்போர் தியாகிகளின் உன்னதமான தியாகத்தைப் பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார்  உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.