எட்டையாபுரத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்கத் திட்டத்தை எட்டையாபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் இராமலட்சுமி சங்கரநாராயணன், தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுடன்  அமர்ந்து உணவு அருந்தினார்!



தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதி மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இந்ததிட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக, பல்வேறு கட்டமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.


அதன்படி, 5வது கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள, செங்குந்தர் நடுநிலைப்பள்ளி மற்றும் டிபிஎம் பள்ளியில் பேரூராட்சி மன்ற தலைவர் இராமலட்சுமி சங்கரநாராயணன்,மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். மாணவர்கள் ஆர்வத்துடன் காலை உணவு பொங்கல் மற்றும் சக்கரை பொங்கல் கேசரி சாப்பிட்டனர். காலை உணவு வழங்கிய தமிழக முதல்வருக்கு பள்ளியில் நிர்வாகி மற்றும் மாணவர் செல்வங்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் செங்குந்தர் பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, டிபிஎம் பள்ளி தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடி, ஏழு தெரு செங்குந்தர் சமுதாயத் தலைவர் கணபதி, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கதிர்வேல், சமூக ஆர்வலர் பொன் பரமானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.