எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது!




வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், தீவிர பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம், பாகம் முகவர்களை ஒருங்கிணைப்பது என பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரத்தில் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில்,பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் ஆன்லைனில் நேரில் ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது.



அப்போது அவர் பேசுகையில் கடந்த அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளையும், கடந்த நான்காண்டு திமுக செய்த ஊழல்கள்,சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், ஆகியவற்றை பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும் என்று அறிவுறுத்தினார், மேலும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தாங்கள் அனைவரும் முழு வீச்சில் செயல்பட்டு அதிமுகவிற்கு வெற்றியை பெற்றுத் தந்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


இந்நிகழ்வில்,ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் போடுசாமி,கோவில்பட்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன்,அவைத் தலைவர் கணபதி,அதிமுக தகவல் தொழில்நுட்ப ப்ரவின் நிர்வாகி விக்னேஷ்,மகளிர் அணி நிர்வாகி சாந்தி,செல்வி, கருப்பசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.