விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு  2000 கிலோ இறைச்சியில் 10000 பேருக்கு அசைவ அன்னதானம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஓ.லட்சுமிநாராயணபுரம் கிராமத்தில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அருள்மிகு ஸ்ரீ ஓடக்கரை முத்துசாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு ஓ.லட்சுமிநாராயணபுரம் கிராம மக்கள் சார்பாக 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் நாட்டு சேவல்கள் ஆகியவை ஓடக்கரை முத்துசாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டு பலியிட்டபின் தடபுடலாக வெட்டப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியில் 10000 பேருக்கு “கம கமக்க”  அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது,இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஜாதி மதம் பேதம் இன்றி ஆண்கள்,பெண்கள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொள்வது வழக்கம்.கோவிலில் சாமி ஆடுவது,சாட்டை அடித்து குறி சொல்வது, முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.


அன்னதானத்தில் கலந்து கொள்பவர்களுக்கு முகம் பாராமல், கேட்பவர்களுக்கு இல்லை என்று கூறாமல் பரிமாறுவதும், அன்னதானத்தில் பரிமாறும் இளைஞர்கள் மது அருந்தாமல் பரிமாறுவதும் இந்த கோவிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்...