உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பேரூராட்சி சார்பில் சொத்துவரி பெயர் மாற்றுதல் ஆணையை உடனடியாக வழங்கிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” எனும் சிறப்பு முகாம்  நடைபெற்று வருகிறது, இதில் பட்டா மாறுதல்,முதியோர் உதவித்தொகை, தொழில் வரி விதிப்பு,மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வியாபாரிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 16 துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகைகள் தமிழக அரசு சார்பில் முகாம் நடைபெற்று வருகிறது, இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் விளாத்திகுளம் பேரூராட்சி,வார்டு எண் 9-முதல் 15-வது வார்டு வரை உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும் வருவாய்துறை சார்பில் பயனாளிகளுக்கு முதல் பட்டதாரிக்கான சான்றிதழ், விதவைச்சான்றிதழ் மற்றும் பேரூராட்சி சார்பில் சொத்து வரி பெயர் மாற்றுதல் ஆணை, மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினார்.


நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன்,விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன்,விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல்,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, அருள்மிகு சுப்ரமணியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் குமாரி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், திமுக பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வார்டு உறுப்பினர் பிரியா வார்டு கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி உள்ளிட்ட பொதுமக்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.