இப்படியே போச்சுன்னா விவசாயம் அழிஞ்சிடும்,அப்புறம்”சோத்துக்கு மாத்திரையை தான் திங்கணும்”அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
தூத்துக்குடி மாவட்டம் புதூர்,விளாத்திகுளம், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம்,கயத்தாறு உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் கடந்த 2024-2025 ம் ஆண்டு பயிரிடப்பட்டிருந்த மானாவாரி விவசாய பயிர்களான உளுந்து,பாசி,கம்பு,மக்கமக்காச்சோளம்,மிளகாய் கொத்தமல்லி உள்ளிட்ட விவசாய பொருள்கள் கடந்த 2024 டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக சேதம் அடைந்தது,சேதம்அடைந்த விவசாய பயிர்களை வருவாய்த்துறை சார்பில் கணக்கீடு செய்து, மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு விவசாய இழப்பீடு தொகைக்கேரி கோரிக்கை வைத்தது, ஆனால் தற்போது வரை தமிழக அரசு சார்பில் விவசாய இழப்பீடு தொகை மற்றும் தனியார் விவசாய காப்பீடு நிறுவனம் சார்பாகவும் எந்த ஒரு இழப்பீடு தொகையும் தற்போது வரை விவசாயி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை, இழப்பீடு தொகை வழங்க கோரி புதூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இந்தாண்டு பலமுறை ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போராட்டம் தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை அலுவலகம் முற்றுகை என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தற்போது வரை விவசாயிகளுக்கான இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை வரவில்லை, இதை கண்டித்து புதூர் வட்டார பகுதி விவசாயிகள் இன்று 18-8-2025 புதூர் பேருந்து நிலையம் முன்பு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகளை அலைத்து வேளாண் துறை அலுவலகத்தில் வட்டாட்சியர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தனியார் காப்பீடு நிறுவனத்தினர், ஆகியோருடன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
அதில் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகளிடம் விரைவில் காப்பீடு மற்றும் இழப்பீடுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினர், இதற்கு விவசாயிகள் இதையேதான் மாதமாதம் கூட்டத்திற்கு அழைத்து எங்களை சமாதானப் படுத்தி வருகிறீர்கள்? அப்புறம் எதற்கு எங்களை கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள்? எங்களுக்கு தற்போது வரை இழப்பீடு மற்றும் காப்பீடு தொகை வழங்கவில்லை என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அதில் ஒரு விவசாயி இப்படியே போய்கிட்டு இருந்தா விவசாயமே அழிந்து போய்விடும் சார், விளைநிலங்கள் அனைத்தும் கல்குவாரியாக மாறிவிடும் அப்புறம் அனைவரும் " சோத்துக்கு மாத்திரை தான் திங்கணும்" ஆவேசமாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பிரசாத் என்ற விவசாயி கூறுகையில், கடந்த 2024 ம் ஆண்டு கனமழை வெள்ளத்தைதாண்டி மிளகாய் விளைச்சல் வந்தாலும்,மிளகாய் வத்தலை அறுவடை செய்யும் போது,பருவம் தவறி ஏப்ரல் மாதம் பெய்த மழையின் காரணமாக 100 கிலோ எடை கொண்ட வத்தலில் 60 கிலோ சோடை வத்தல் (கழிவு வத்தல்) மீதம் 40 கிலோ மட்டும்தான் நல்ல மிளகாய் வத்தல் இருந்ததாகவும், அதனால் ஒரு குவிண்டலுக்கு இங்கு 6000 ரூபாய்க்கு கூட வத்தல்களை கேட்பதற்கு வியாபாரிகள் முன்வருவதில்லை, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையோ காப்பீடு தொகையோ வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர், அதேபோல் மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 59 கோடி ரூபாய் இழப்பீடு தேவைப்படுகிறது என்று தமிழக தெரிவித்ததாக கூறப்படுகிறது, ஆனால் 7 மாதங்களாகியும் தற்போது வரை தொகை வழங்கவில்லை என்றும், இன்னும் ஒரு மாதத்தில் விவசாய பணிகள் தொடங்க உள்ள நிலையில், தற்போது வரை இழப்பீடு தொகை வழங்காதது பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது, வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் அனைத்து விவசாயிகள் வங்கி கணக்கிலும் இழப்பீடுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை வரவழைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாகவும்,அப்படி வழங்கப்படவில்லை என்றால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வீட்டையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அலுவலகத்தையும் முற்றுகிட போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
அதேபோல் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைதுறை சார்பில் வழங்கப்படும் விதைகள் செடிகள் நன்கு வளர்கின்றன, ஆனால் அதில் மணிகள் உற்பத்தியாவது இல்லை என்றும், குப்பையான விதைகளை வழங்குவதாகவும், தேவையற்ற விவசாய மருந்துகளை விவசாயிகள் மீது சுமத்த பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினர். அதேபோல் உழவு மானியம்,விதை மானியம், தரமான விதைகள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.