திமுக தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபசீட் வாங்காது- இன்னும் 5 அமாவாசை முடிந்ததும் விடியா ஆட்சி முடிந்து பெளர்ணமி நிலாவாக அதிமுக ஆட்சி மலரும் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு!




அதிமுக., தகவல் தொழில்நுட்ப பிரிவு , சார்பில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில அதிமுக., பூத் பாகம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதிமுக., தகவல் தொழில்நுட்ப பிரிவின் நெல்லை மண்டல துணைச் செயலாளர் கருப்பசாமி, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்டத் தலைவர் பிரதீப் ஆகியோர் பயிற்சியளித்தனர்.


இதில், வடக்கு மாவட்ட அதிமுக., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:


கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்திருக்கின்றார் என்றால் திமுக பலவீனமாக இருக்கிறது .தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய காரணத்தினால் தான் 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலாக கூட்டணி இல்லாமல் 234 தொகுதியிலும், அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று, தனியாக நின்று வெற்றி பெற முடியும் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி காட்டினார் .திமுக தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபசீட் வாங்காது. இன்னும் 5 அமாவாசை முடிந்ததும் விடியா ஆட்சி முடிந்து பெளர்ணமி நிலாவாக அதிமுக ஆட்சி மலரும் 2026ல் சட்டமன்ற தேர்தல் தமிழக மக்களுக்கு வாழ்வா? சாவா ? பிரச்சனை.. அதிமுக விற்கும் அதே போன்று தான். பேசுவதற்கே அறுகதையற்றவர்கள் அதிமுக பற்றி பேசுகின்றனர். அதை பற்றி கவலை வேண்டாம் 


திமுக குடும்ப கட்சி, ஆனால் அதிமுகவில் நம்மில் ஒருவராக கிளை கழகச் செயலாளராக இருந்து புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்துள்ளார்


மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் திமுக ஆட்சியில் மின்சார பில்லை பார்த்தல் ஷாக் அடிக்கிறது,விளாத்திகுளம் தொகுதி நலனுக்காக இங்குள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருநாளாவது சட்டமன்றத்தில் பேசியது உண்டா? என்று கேள்வி எழுப்பினார்.


இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாட்டினை விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன்,தனபதி ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், புதூர் நகர செயலாளர் ஆண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவகாமசுந்தரி,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத்தலைவர் மோகன், சுரேஷ்,மருதுபாண்டி, கார்த்திக்ராம், வைப்பாறு முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் செண்பகப்பெருமாள்,மகளிர் அணி சாந்தி,பிரியா மற்றும் கிளைக்கழக ஒன்றிய பேரூர் கழக உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.