விளாத்திகுளம் அருகே 49 - வதுவயதில் மருத்துவம் படிக்கச் செல்லும் அமுதவல்லி நம்பிக்கை!
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்கிய நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், 49 வயதான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரைச் சேர்ந்த அமுதவல்லி என்பவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய மகளும் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் எம்.பி.பி.எஸ் பொதுக் கலந்தாய்வுக்காக காத்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி அமுதா வள்ளி ( 40) , இந்த தம்பதி சம்யுக்தா கிருபாளினி. பிசியோதெரபிஸ்ட்டான அமுதவல்லி நாகலாபுரத்தில் தனியாக பிசியோதெரபி கிளினிக் வைத்துள்ளார்.
1994ல் அமுதவல்லி 12ம்வகுப்பு முடித்தும் மருத்துவம் படிக்க விரும்பியுள்ளார். ஆனால் அன்று வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பிசியோதெரபி எடுத்து படித்துள்ளார். இருந்த போதிலும், மருத்துவம் படிக்க முடியவில்லை என்ற மன வருத்தம் மட்டும் இருந்துள்ளது.
அவருடைய நீண்ட கால கனவு தனது மகள் சம்யுக்தா கிருபாளினி மூலமாக நிறைவேற வாய்ப்பு கிடைத்துள்ளது. சம்யுக்தா கிருபாளினி 12ம் வகுப்பு படித்து நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த போது தானும் நீட் தேர்வு எழுதலாம் என்று அமுதவல்லிக்கு வர தனது மகளிடம் தனது விருப்பத்தை கூற மகளும் தாயாருக்கு ஊக்கம் கொடுத்தது மட்டுமின்றி, அமுதவல்லி நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் டிப்ஸ்கள் கொடுத்துள்ளார்
தனது தன்னம்பிக்கை, மகள் கொடுத்த டிபஸ், கணவர் முழு ஒத்துழைப்பு காரணமாக அமுதவல்லி நீட் தேர்வு எழுதி நீட் தேர்வில் 147 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவருடைய மகள் சம்யுக்தா கிருபாளினி நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட் மதிப்பெண் அடிப்படையில் நேற்று (ஜூலை 30-ம் தேதி) தொடங்கியது.மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதற்கு 56 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களும் இடங்களை தேர்வு செய்தார்கள்.
இதில் பங்கேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து அமுத வல்லி கூறுகையில் நான் 12வகுப்பு முடிந்ததும், மருத்துவராக விரும்பினேன். ஆனால் அன்று முடியவில்லை, பிசியோதெரபி படித்து பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறேன், எனது மகள் நீட் தேர்வுக்கு தயாராகிய போது எனக்கும் மீண்டும் மருத்துவம் படிக்க ஆசை வந்தது
32 ஆண்டுகளுக்கு முன் நான் 12-ம் வகுப்பு முடித்தேன். அப்போது இருந்த பாடங்களை விட நீட் தேர்விற்கான பாடங்கள் கடினமாகவே உள்ளன. இருந்தாலும் மனம் தளராமல் தினமும் 6 மணி நேரம் ஆர்வத்துடன் படித்தேன். எனக்கு எழும் சந்தேகங்களை மகளிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். மகளின் வழிகாட்டுதலில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நீட் தேர்வில் நான் 147 மதிப்பெண்கள் எடுத்தேன். எனது மகள் சம்யுக்தா கிருபாளினி 460 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எனக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது . நான் பிசியோதெரபி படிப்பதற்கு முன்னரே எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அது 32 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிறைவேறி உள்ளது. இந்த வயதிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். எதிர்மறை விமர்சனங்களை தவிர்த்துவிட்டு கடந்து விடுவேன், இன்னும் ஆறு வருடங்கள் படிக்க வேண்டி இருக்கிறது அதை நோக்கி தான் பயணிப்பேன். என் மகள் வயதுள்ள மாணவர்களுடன் தான் படிக்கப் போகிறேன், என் மகளிடம் எப்படி நடப்பாக இருக்கணும் அதே போன்று என்னிடம் படித்திருக்கக்கூடிய மாணவர்களுடன் நட்பாக இருக்க பழகிக் கொள்வோம். பிசய தெரபி படித்திருப்பதால் மருத்துவம் படிக்க எளிமையாக இருக்கும், நீட் தேர்வு கடினமான விஷயம் கிடையாது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கேள்விகள் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தெளிவான புரிதல் இருந்தால் நிச்சயமாக நீட் தேர்வில் வெற்றி பெறமுடியும் என்றார்...