விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக சரி செய்வேன் : விவசாய மக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சத்யா!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணிகட்சி சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா பட்டித்தேவன்பட்டி, செங்கோட்டை, மேலக்கரந்தை, மாசர்பட்டி,அயன்ராசாபட்டி,கைலாசபுரம் கீழ்நாட்டுகுறிச்சி,சக்கிலிப்பட்டி,தாப்பாத்தி,அயன்வடமலாபுரம்,அச்சங்குளம்,வேடப்பட்டி உள்ளிட்ட விவசாய கிராம பகுதி மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசிய வேட்பாளர் சத்யா,கடந்த ஐந்தாண்டுகளாக போதுமான காப்பீடு மற்றும் நிவாரணத்தொகை விவசாயிகளுக்கு சேராமல் விவசாயிகள் பெறும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக சரி செய்யவும், காப்பீடு மற்றும் நிவாரணத் தொகை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.



இந்நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன்,கரிசல்பூமி வரதராஜன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் மோகன், சிறுபான்மை நலப்பிரிவு சதீஷ் தேசிய ஜனநாயககூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.