மத்திய மாநில அரசின் திட்டங்களை உங்களிடம் நான் சேர்ப்பதில் சரியான சட்டமன்ற உறுப்பினராக இருப்பேன், விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா வாக்குறுதி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மணியக்காரன்பட்டி, கம்பத்துப்பட்டி, முத்துச்சாமிபுரம் வடக்கு முத்தையாபுரம், சிவலார்பட்டி, சுப்புலாபுரம், நடுக்காட்டூர், முத்துப்பட்டி,கந்தசாமிபுரம், சேர்வைக்காரன்பட்டி, மாதலாபுரம்,P.ஜெகவீராபுரம்,புதுச்சின்னையாபுரம், பூதலாபுரம்,கோவில் குமரட்டையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த போது,அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு வீடுகட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய சத்யா மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை பொதுமக்களுக்கு பொதுமக்களாகிய உங்களிடம் சேர்ப்பதில் உங்களுக்கான சரியான சட்டமன்ற உறுப்பினராக இருப்பேன் என்றும், சரியான சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் மட்டுமே மக்களுக்கான அனைத்து திட்டங்களும் உங்களிடம் வந்து சேரும்,என்னை வெற்றி பெறச் செய்தால் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பின் உங்களுக்காக உழைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் மோகன்,சிறுபான்மை நலப்பிரிவு சதீஷ், பாரதிய ஜனதா மாவட்ட செயலாளர் சரவணன் கிருஷ்ணன்,பாரதிய ஜனதாகட்சி நிர்வாகிகள் கந்தசாமி, பழனிமுருகன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.