மாநில அரசின் திட்டங்கள் அனைத்தையும் தொகுதி மக்களுக்கு கொண்டு செல்ல நான் முழு வீச்சில் பணியாற்றியுள்ளேன்:திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு:விதி வீதியாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மார்கண்டயேன்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் விளாத்திகுளம் திமுக வேட்பாளரும் விளாத்திகுளம் தற்போதைய  சட்டமன்ற உறுப்பினருமான மார்கண்டயேன் பனையடிபட்டி,அயன் பொம்மையாபுரம், கந்தசாமிபுரம், ஆற்றங்கரை,ஓயம்பட்டி,தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், என்.வேடப்பட்டி,அச்சங்குளம்,அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, கைலாசபுரம்,அயன்ராஜாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த மார்கண்டயேனுக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.



அப்போது பேசிய மார்கண்டயேன் கடந்த ஐந்தாண்டுகளாக மாநில அரசின் திட்டங்கள் அனைத்தையும் தொகுதி மக்களுக்கு கொண்டு செல்ல நான் முழு வீச்சில் பணியாற்றியுள்ளேன். 


விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து விளாத்திகுளம் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு புதிய மகளிர் விடியல் பேருந்து பெற்றுத்தந்துள்ளேன், பெரும்பாலான மக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வாங்கிக் கொடுத்துள்ளேன், விடுபட்ட மக்களுக்கும் திமுக ஆட்சி வந்த உடன் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தகை 2000 பெற்று தர உரிய நடவடிக்கை எடுப்பேன் இன்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி,முன்னாள் கவுன்சிலர் நடராஜன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.