சட்டசபைக்கு ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் மக்கள் பணியாற்றியுள்ளேன் : விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேன் தீவிரவாக்கு சேகரிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் சல்லிசெட்டிபட்டி, மாதராஜபுரம்,சொக்கமூப்பன்பட்டி, சின்னவநாயக்கன்பட்டி, சேதுபுரம் குமாரசித்தன்பட்டி, சென்னம்பட்டி,L.V.புரம், மாதலபுரம், எம்.துரைசாமிபுரம், குமாரலிங்கபுரம்,புதுசின்னையாபுரம்,பூதலாபுரம், கந்தசாமிபுரம்,சங்கரப்பநாயக்கன்பட்டி,சேர்வைகாரன்பட்டி, சின்னையாபுரம், கோவில்குமரட்டையாபுரம், சென்னம்பட்டி,எம்.துரைச்சாமிபுரம் உள்ளிட்டபகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மார்கண்டயேன் கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் விளாத்திகுளம் தொகுதி மக்களுக்காக ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் சென்று மக்களுக்கான கோரிக்கையை முன் வைத்து,புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நியாய விலைகடை, அங்கன்வாடிகட்டிடம், புதிய நிழற்குடை, கலையரங்கம்,பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், சாலை அமைப்பு பணிகள்,சாலை மேம்பாலங்கள், உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்காக நிதியைப்பெற்றுமக்கள் பணி செய்துள்ளேன், மீண்டும் கழக ஆட்சி வந்த உடன் கந்தசாமிபுரம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் துத்திநத்தம் வரை புதிய சாலை அமைக்க ஏற்பாடு செய்வேன் எனவே கழக ஆட்சி அமைக்க உதயசூரியன் சின்னத்திற்கு தங்களின் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ்,மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெற்றிவேலன், சண்முகராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.