உங்கள் வீட்டு பெண்ணாக,உங்கள் சகோதரியாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன் அதிமுக வேட்பாளர் சத்யா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிசார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் முதல் வாக்குச்சாவடியான அயன்கரிசல்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து வேட்பாளர் சத்யா பேசுகையில் நான் உங்கள் சகோதரியாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்றென்றும் இருப்பேன்,நான் எப்போதும் உங்களுக்காக விளாத்திகுளத்தில் இருப்பேன்,எங்கள் குடும்பம் அதிமுகவிற்கு 50 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளது,நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு என்றும் நான் செவி சாய்ப்பேன் என்று அழகாபுரி,வெம்பூர், மாவில்பட்டி, மெட்டில்பட்டி,பெருமாள் கோவில்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்,தெற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு தலைவர் மோகன், சிறுபான்மை பிரிவு சதீஷ், முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார்,பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணா கிருஷ்ணன்,கந்தசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.