திமுக காரர்கள் " உப்பு போட்டு சாப்பிடுகிறார்களா " என்று தெரியவில்லை : திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே நல்லது கடம்பூர் ராஜு பேச்சு!
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜீ பேசுகையில்,
பாராளுமன்ற தேர்தலில் நம் கூட ஒருவர் இருந்தார்கள், அவர்கள் தற்போது திசை மாறிப் போய்விட்டார்கள், திசை மாறி போனார்கள் இன்று அவர்கள் திக்குத் தெரியாமல் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு போய் விடுவார்கள், திசை மாறியவர்கள் திக்குத் தெரியாமல் போகும் நிலை இந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் நிறைய கட்சிகளை பார்க்கப் போகிறோம்.
சாதாரண உழைக்கின்ற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அண்ணா திமுக மட்டும் தான்.
திமுகவில் அண்ணாவில் இருந்து கருணாநிதி வரை உழைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாண்ட முடியவில்லை, கருணாநிதிக்கு பிறகு கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் உயிரோடு இருக்கும் போதே அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் துணை முதல்வராக வேண்டிய நாட்டின் அவசியம் என்ன? ஒரே வீட்டுக்குள்ளே முதலமைச்சரும் துணை முதலமைச்சர் இருக்க வேண்டிய அவசியம் அசிங்கம் இந்தியா மட்டுமல்ல உலகிலேயே எங்கும் நடக்காத அசிங்கம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இதயம் பார்த்துக் கொண்டு திமுக காரர்கள் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை, ஏனென்றால் கொஞ்சமாவது உணர்வு சூடு சொரணை வேண்டாமா, திமுக என்ன கருணாநிதியின் குடும்ப சொத்தா?, இது மன்னர் ஆட்சியா?, திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே நல்லது, அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது, தன்னுடைய வீட்டுக்கு மக்களுக்கு மட்டும் நல்லது என்றால் அது திமுக ஆட்சி...
இந்தத் தேர்தலில் நீங்கள் "டப்பு டப்புன்னு" இரட்டை இலையை பார்த்து அமுக்குங்க,தேர்தல் முடிந்த பிறகு "பட்டு பட்டுன்னு" உங்க வீட்டில பத்தாயிரம் ரூபாய் வந்து விழும்.
ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் பெரிய அறிவாளி இவர்தான் கண்டுபிடிச்சிருக்காரு. 0+0 = 0, ஆமா நாங்க ரெண்டு பூஜ்ஜியம் வாங்குவோம், அந்த ரெண்டு பூஜ்ஜியத்திற்கு முன்னாடி ரெண்டு சேர்த்து 200 வாங்குவோம்,199 கூட கிடையாது.
திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது, ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விடுவார்கள்.
தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக கூறி தற்போது 50 நாள் கூட ஒழுங்காக வேலை வழங்கவில்லை என்றும், இன்று 100 நாள் வேலையை 125 நாளாக அறிவித்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி, அதையும் தாண்டி எடப்பாடி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 125 நாளை கூடுதலாக 25 நாள் சேர்த்து 150 நாளாக உயர்த்த உள்ளதாக கடம்பூர் ராஜீ பேசினார்....
இந்த விழாவுக்கான ஏற்பாட்டினை அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன்,தனவதி, நகர செயலாளர் ஆண்டி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் மோகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்யா, ஒன்றிய செயலாளர் மகேஷ்,ராமச்சந்திரன், போடுசாமி,பால்ராஜ், சிறுபான்மை நலப் பிரிவு சதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,மருதுபாண்டி, சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் பெருமாள் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.