தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சரவணப்பெருமாள் மற்றும் வள்ளிக்கொண்டு ஆகிய 2 நண்பர்கள் சேர்ந்து தங்களது சொந்த ஊரான வாதலக்கரை கிராமத்தில் உள்ள 202 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.500 வீதம் தங்களது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து ஆயிரத்தை கிராம மக்களுக்காக வழங்கி நெகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் கூட விளாத்திகுளம் பகுதி மக்களுக்கு ரூ.1000 தான் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதையொட்டி, வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 நண்பர்கள் சேர்ந்து அனைத்து குடும்பத்துக்கும் தங்களால் முடிந்த ரூ.500 வழங்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.இந்நிகழ்வில் தலைவர் : சீதாலட்சுமி சுப்பையா ,ஊராட்சி செயலர்: கணேசன் கிராம உதவியாளர்: கருப்பசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
எங்க ஊருக்கு நாங்க உதவலனா எப்படி...? : ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ.500 வீதம் கிராமத்திலுள்ள 202 குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்கிய 2 நண்பர்கள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்: ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், ஆட்டுகிடாய், LED டிவி என பரிசு மழையில் நனைந்த வெற்றியாளர்கள் : ஆர்வத்துடன் கண்டுகளித்த ரசிகர்கள்!
அடுத்த
வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026