" E வாகன் " செயலி 2-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா முழுவதும் உள்ள லாரி ஓட்டுநர் மற்றும் லாரியும் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும், விபத்து காப்பீடு, வாகன விபத்து காப்பீடு, வாகனம் பழுதாகி நின்றால் சரி செய்ய மெக்கானிகை அழைக்க என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட E-VAHAN SEVAI MOBILE APP" என்னும் புதிய செயலி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, இந்த செயலியில் கர்நாடகா, ஆந்திர, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 த்திற்கு மேற்பட்டோர் இந்த செயலில் உறுப்பினராக உள்ளனர். 



இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே செயலியில் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த செயலி இந்திய அரசால் இன்று அங்கீகரிக்கப்பட்டு தற்போது 2-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் 79 சுதந்திர தின விழாவை முன்னிட்டு,E வாகன் சேவையில் உறுப்பினராக இருக்கக்கூடிய லாரி உரிமையாளர் ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் ஆகியோரின் குடும்பங்களை சேர்ந்த பள்ளிப் பயிலும்  மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக, இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த 10  மாணவ, மாணவிகளுக்கு சுமார் 10,000 ஊக்குத்தொகை என 10 மாணவர்களுக்கு மொத்தம் 1 லட்சம் ரூபாய் வழங்கி கௌரிக்கப்பட்டது, இதில் 8 மாணவ மாணவிகள் அரசு பள்ளியிலும் 2 மாணவ மாணவிகள் CBSC பள்ளியிலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.