விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை : குளம் போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி!







தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டையாபுரம்,குளத்தூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக  பலத்த மழை பெய்தது, இதனால் எட்டையாபுரம் நகர் பகுதி மற்றும் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பஜார் பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால்  பொதுமக்கள் மற்றும் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் பெரும் அவதி அடைந்தனர். முறையாக வடிகால் வசதி இல்லாததால் எட்டயபுரம் நகர் பகுதிகளில் ஒரு மழைகே மழை நீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.



கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாரே வாகனங்களை இயக்கினர்.



கருகும் நிலையில் உள்ள மிளகாய் செடிகளுக்கு தற்போது மழை பெய்ததால், மிளகாய் சாகுபடி செய்த ஒரு சில விவசாயிகள்  சிறிதளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.