விளாத்திகுளம் அருகே யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கருத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் கந்தசாமி (45), இவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது, கந்தசாமி சரியாக நடக்க முடியாமலும், திருமணம் ஆகாமல் தனிமையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாகவும் ,இதனால் மனவிரத்தில் இருந்து வந்த கந்தசாமி இனி "யாருக்கும் நான் பாரமாக இருக்க விரும்பவில்லை" என்று ஊரில் உள்ளவர்களிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தகவல் அறிந்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.